முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் கட்ட பார்லி. தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Election

Source: provided

புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த 20-ந் தேதி 5-வது கட்ட தேர்தல் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அரியானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்களிலும், டெல்லி, காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 58 பாராளுமன்ற தொகுதிகள், 6-ம் கட்ட வாக்குப்பதிவை சந்தித்தன.அத்துடன், ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 

பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நேரம் செல்லச்செல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.  58 தொகுதிகளில் 61.2 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில்  மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது. மாநிலம் வாரியாக விவரங்கள்: பீகார் - 52.2 சதவீதம் டெல்லி - 57.67 சதவீதம் அரியானா - 60.4 சதவீதம்ஜம்மு காஷ்மீர் - 54.3 சதவீதம் ஜார்க்கண்ட் - 63.76 சதவீதம் ஒடிசா - 69.56 சதவீதம்உத்தர பிரதேசம் - 54.03 சதவீதம் மேற்கு வங்கம் - 79.47 சதவீதம் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து