Idhayam Matrimony

7-வது மற்றும் இறுதி கட்டத்தேர்தல்: 57 பார்லி. தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

புதன்கிழமை, 29 மே 2024      இந்தியா
Election 2024-03-29

Source: provided

புதுடெல்லி : 7-வது மற்றும் இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 57 தொகுதிகளில் இன்று மாலையுடன் அனல் பறந்த பிரசாரம் ஓய்கிறது. கடைசி நாளில் வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க. மற்றும் இன்டியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் மும்மூரமாக ஈடுபட்டனர்.

ஏழு கட்டமாக...

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது. கடந்த மாதம் 19, 26, கடந்த 7, 13, 20, 25-ந்தேதிகளில் முதல் 6 கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

57 தொகுதிகளில்.... 

7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வருகிற 1-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 57 தொகுதிகளில் அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாரணாசி தொகுதி...

7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் உள்ளது. 3-வது முறையாக இந்த தொகுதியில் களம் இறங்கி இருக்கும் பிரதமர் மோடி இந்த தடவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு திரட்டி வருகிறார். மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த தொகுதி தேர்தல் முடிவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைவர்கள் தீவிர...

இந்த 57 தொகுதிகளிலும் கடந்த 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடந்து வருகிறது. 57 தொகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் 57 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் இன்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) அவர்கள் இருவரும் ஒடிசாவில் ஒரே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி வாரணாசியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து