முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பன் படத்தில் - ராஜீவ் மேனன்

புதன்கிழமை, 5 ஜூன் 2024      சினிமா
Weapon 2024-05-05

Source: provided

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம்-1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பை கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“இயக்குநர் குகன் இந்த கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்த கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். கதை மிகவும் உறுதியானதாக இருக்கும்போது நடிகர்களின் நடிப்புத்திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்பதை ‘வெப்பன்’ நிரூபித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து