முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் தீப்பிடித்த எரிந்த விமானம்: 389 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      உலகம்
Canada 2024-05-09

Source: provided

டொராண்டோ : கனடாவில் இருந்து பாரீசுக்கு புறப்பட்ட விமானம் என்ஜின் வெடித்து சிதறியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் மேற்கொள்ளவிருந்த 389 பயணிகள் அதிர்ஷ்வசமாக தப்பினர். 

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியது. என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு அறிவுறுத்தினர். விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கினர். 

அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பினர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள்  வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து