முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியின் அனுபவத்தை யாராலும் வீழ்த்த முடியாது கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

வாஷிங்டன்: விராட் கோலியின் அனுபவத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

11 பேரும் பங்காற்ற... 

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்த வகையில், நேற்றைய போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.

வீழ்த்த முடியாது....

"வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் வீழ்த்த முடியாது," என்று தெரிவித்தார். 

மாற்றமும் இல்லை...

மேலும் அவர் தெரிவிக்கையில்., 7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாடினோம். தற்போது 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து