முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சாமை விமர்சனம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      சினிமா
Anjamai-Review 2024-06-10

Source: provided

நாயகன் விதார்த், தனது மகனை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறார். அவரது மகனும் நன்றாக படித்து பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிப்பதோடு மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகிறது.

இருந்தாலும், தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடுமையாக போராடும் விதார்த், அதன் மூலம் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வினால் திடீரென்று இறந்து விடுகிறார். தனது அப்பாவின் இறப்புக்கு நீதி கேட்கும் மாணவனுக்கு, வழக்கறிஞர் ரஹ்மான் துணையாக நின்று, சட்ட ரீதியாக போராட அதில் வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் ‘அஞ்சாமை’ படத்தின் கதை.

நீட் தேர்வை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்வை அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், படத்தில் காட்டப்படும் சட்ட ரீதியான போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால், நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ஏழை விவசாயியாக நடித்திருக்கும் விதார்த், அவரது மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன், வழக்கறிஞராக நடித்திருக்கும் ரஹ்மான், விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன் ஆகியோரது நடிப்பு, அருமையாக உள்ளது.

மொத்தத்தில், ‘அஞ்சாமை’ மாணவர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து