முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் உயர்த்திப் பிடித்ததால் அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Rahul 2024-06-10

புது டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

இது லக்னோவைச் சேர்ந்த கிழக்கு புத்தக கம்பெனி(ஈஸ்டர்ன் புக்) வெளியிட்ட சிவப்பு - கருப்பு நிற அட்டையிலான அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகமாகும்.தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி வாய்ப்பு என்றும் பிரசாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி கையில் உயர்த்திப் பிடித்திருந்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது இந்த புத்தகத்தின் 10-வது பதிப்பை வெளியிட்டுள்ள கிழக்கு புத்தக கம்பெனி, இந்தாண்டு தொடங்கி 6 மாதங்களில் இதுவரை 5.000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஓராண்டு முழுவதுமே 5,000 புத்தகங்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தக கம்பெனியின் அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பை எழுதியவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து