முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரியனின் இயங்குநிலை குறித்து ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
ISRO- 2024-06-10

புதுடில்லி, மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவு செய்து, இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்த படங்களை நேற்று (ஜூன் 10) இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ம் ஆண்டு செப்., 2ம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

சமீபத்தில், ஆதித்யா -எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி இருந்தது. இந்நிலையில், மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவு செய்து, ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்த படங்களை நேற்று (ஜூன் 10) இஸ்ரோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து