முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று நான் ஒருபோதும் கூறவில்லை : வெளியான தகவலுக்கு சுரேஷ் கோபி மறுப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Suresh-Gopi 2024-06-10

Source: provided

திருவனந்தபுரம் : தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் பரவின. இந்நிலையில் அமைச்சர் பதவி வேண்டாம் 

என்று நான் ஒருபோதும் கூறவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே. முரளீதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கேரளாவின் முதல் பா.ஜனதா எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கிடையே, தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டாம் எனவும், தான் எம்.பியாகவே பணி செய்ய விரும்புகிறேன் என்றும் சுரேஷ் கோபி கூறியதாக தகவல் வெளியானது. கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.

இது முற்றிலும் தவறானது. அமைச்சரவையில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மோடி அமைச்சரவையில் கேரள மக்களின் பிரதிநிதியாக நான் இருப்பது எனக்கு பெருமையே. பிரதமர் மோடியின் தலைமையில், கேரளாவிற்கு தேவையான வளர்ச்சி மற்றும் செழுமையை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து