முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம் : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் கடந்த மாதம் 6-ம் தொடங்கியது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடி இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பிது வந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி கடந்த ஜூன் 6-ம் தேதியுடன் விண்ணப்ப பதிவானது நிறைவு பெற்றிருந்தது. ஜூன் 6-ம் நள்ளிரவு நிலவரப்படி 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தனர். 

இந்நிலையில் விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை கடந்த 9-ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. 

அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவானது வரும் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து வந்தனர்.

அதன்படி, மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணக் கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து  ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியலும் வெளிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து