முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை தொடர்: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

புதன்கிழமை, 12 ஜூன் 2024      விளையாட்டு
12-Ram-51

Source: provided

நியூயார்க்: 24 லீக் ஆட்டங்கள்... 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா...

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.  தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா...

இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது. இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து