முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு குளறுபடிகளால் மாணவர்களிடையே அச்சம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

சென்னை, நீட் தேர்வு குளறுபடிகளால் மாணவர்களிடையே அச்சம் எற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 கடந்த மே மாதம் 5 -ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை.  கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடைபெற்றுள்ளது.  

கடும் எதிர்ப்பை அடுத்து 1563 பேருக்கு கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.  ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும், ஒரு கேள்வியை தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். 

சுப்ரீம் கோர்ட் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை.   சட்டப் படிப்புக்கான ஆன்லைன் தேர்வையும், மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதுவதையும் எப்படி ஒப்பிட முடியும்?சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்திப் பார்ப்பது சரியல்ல. நேர பற்றாக்குறைக்கு கருணை மதிப்பெண் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்? ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி கொண்டிருக்கிறது. அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து 6 பேர் 720 மதிப்பெண் எடுத்துள்ளனர். 

2024-ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  கருணை மதிப்பெண் என முடிவெடுத்த போது தேசிய தேர்வு முகமை யாரிடம் அதனை தெரிவித்தது? நீட் குளறுபடிகளால் மாணவர்களிடையே அச்சம் எற்பட்டுள்ளது. 

 நீட் விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க. அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து