முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Election-Commision 2023-04-20

விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்படுகிறது. 

இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று வெள்ளிக் கிழமை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 21-ம் தேதி கடைசி நாளாகும். வரும் 24-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ம் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். 

இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். 

இதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்குள்ள தனி அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களுடைய வேட்பு மனுவை முன்மொழிய வருகை தருபவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து