முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சென்னை அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியானது

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      விளையாட்டு
IPL 2024-01-20

Source: provided

புதுடெல்லி: ஐ.பி.எல். சென்னை அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது.

3-வது முறையாக...

அண்மையில் முடிவடைந்த 17-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது. இதனால் இந்த சீசனில் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தது.இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. 

மதிப்பு உயர்வு...

அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை அணி...

அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ரூ.1,805 கோடி மதிப்புடன் கொல்கத்தா உள்ளது. 4வது இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணியின் மதிப்பு ரூ.1,704 கோடியாக உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.1,103 கோடியாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து