முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Kachirval-Sunitha 2024-03-27

புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்க வேண்டும் என அவரது மனைவி சுனிதாவுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, மார்ச் 28-ல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்பாக பேசினார். இது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நீதிமன்ற விதிகளுக்கு எதிரான செயல் இது எனக் கூறியிருந்தார். 

இந்த வீடியோவை சுனிதா மற்றும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் அமித் ஷர்மா,  வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்குவதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சுனிதா விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யாரேனும் அந்த வீடியோவை மறுபதிவேற்றம் செய்தால், சமூக வலைதள நிறுவனங்கள் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மனு மீதான விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து