முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பேட்டிங் தேர்வு...

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில்  செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நேபாளம் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர்.

116 ரன்கள் இலக்கு...

இதில் டி காக் 10 ரன்னில் அவுட் ஆனார்.  இவரையடுத்து களமிறங்கிய மார்க்ரம் 15 ரன்னிலும்,  கிளாசென் 3 ரன்னிலும்,  மில்லர் 7 ரன்னிலும் வெளியேறினர்.  மறுமுனையில் நிலைத்து ஆடிய ஹென்றிக்ஸ் 43 ரன்னில் அவுட் ஆனார்.  இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.  நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர்.  இதில் குஷால் புர்டெல் 13 ரன்னிலும்,  அடுத்து வந்த ரோஹித் பவுடல் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.

4 விக்கெட்டுகள்...

இதையடுத்து ஆசிப் ஷேக் உடன் அனில் சா ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.  இதில் அனில் சா 27 ரன்னிலும்,  அடுத்து வந்த திபேந்திர சிங் ஐரி 6 ரன்னிலும்,  குஷால் மல்லா 1 ரன்னிலும் வெளியேறினர்.  மறுமுனையில் நிதானமாக ஆடிய வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 42 ரன்னில் அவுட் ஆனார்.தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை மட்டுமே எடுத்தது.  இதன்மூலம்  தென் ஆப்பிரிக்கா அணி  1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இந்த தோல்வி மூலம் நேபாள அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து