முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      உலகம்
China 2024-06-16

Source: provided

பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து உள்ளது. இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, சீனக் கடலோரக் காவல்படையினர் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளி நாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும். 

60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படலாம் என்று விதிகளில் குறிப்பிட்டு உள்ளது. 

இதற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது, மனிதாபிமானமற்றது என பிலிப்பைன்ஸ் விமர்சித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து