முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      தமிழகம்
Train-2023-05-01

Source: provided

நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், மாநகர காவல் துறையினர், ரயில்வே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமான பொருள்கள், பைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை குறித்து ஆய்வு செய்து வந்தனர். மாலை நேரத்தில் பயணிகள் அதிகளவில் வருகை தரும் வேளையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பயணிகள் அச்சமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்களும் ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டன, ரயில் நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து