முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது

புதன்கிழமை, 11 மார்ச் 2026      தமிழகம்
Exam-2026-03-11

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ மாணவிகள், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனா். தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு வினாத்தாள்கள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள்கள் குறித்த புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இந்த தேர்வில் 12,292 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. தடையில்லா மின்சாரம், தேர்வுப் பணிகளுக்கு உரிய பாதுகாப்பு, போதுமான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டத்தில் 841 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 31,352 மாணவர்களும், 32,037 மாணவிகள் என மொத்தம் 63,389 பேரும், 3004 தனித் தேர்வர்களாகவும், 300 தேர்வு மையங்களில் ( சிறப்பு தேர்வு மையம் மத்திய சிறை புழல் உட்பட) தேர்வு எழுதி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் தேர்வு பணியில் 300 முதன்மை கண்காணிப்பாளர்கள், 300 துறை அலுவலர்கள், 500 பறக்கும் படை நிலையான படை உறுப்பினர்கள், 4100 அரை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1200 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 6400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்வு பணியில் 159 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2075 அரைக் கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படை நிலையான படை உறுப்பினர்கள் மற்றும் 316 துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 946 ஆசிரியர்கள் (ஸ்கிரைப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து