முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      இந்தியா
Mobile-Phone

Source: provided

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியை சேர்ந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சனை விட வெறும் 48 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த ரவீந்திர வாய்க்கர். மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் விதிகளை மீறி, எம்.பி. ரவீந்திர வாய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர் கைப்பேசியை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

இதனிடையே, இது குறித்து மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி செய்தியாளர்களுடன் நேற்று (ஜூன் 16) பேசியதாவது, ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் எவ்வித முறைகேடும் செய்ய இயலாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை. அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஆகவே இது பொய்யான தகவல். பொய்யான தகவலை பதிவிட்ட பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு 24 மணி நேரத்தில் உரிய விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஜோகேஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட, தரவு உள்ளீடு செய்யும் அலுவலர் தினேஷ் குராவ்வின் தனிப்பட்ட கைப்பேசி அங்கிருந்த சிலருக்கு கைமாறப்பட்டுள்ள சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு எவ்வித தொடர்புமில்லை. கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் மூலம் டேட்டா எண்ட்ரி பணிகளுக்கு உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இவையனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையிலேயே நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சன் உள்பட யாரும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரவில்லை. தபால் ஓட்டுகளை மட்டுமே எண்ண கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விவரங்களை வெளியிட முடியும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து