முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியவரை தாக்கிய வீடியோ வைரல்: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
bus-2022 08 25

திருப்பூர், திருப்பூரில் குடிபோதையில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை தாக்கி இறக்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

திருப்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து தினமும் ஒருமுறை மாற்று பேருந்தாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கும் இயக்கப்படுகிறது. அப்படி அந்தப் பேருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோபி புறப்பட இருந்தது. அப்போது முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறி உள்ளார். அவர் அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு, நடத்துநர் தங்கராசு பேருந்தில் இருந்து அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய முதியவரை, மிரட்டும் தொனியில் இரும்புக் கம்பியால் அடித்துவிடுவதாக நடத்துநர் தங்கராசு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி விமர்சனத்தை கிப்பிய நிலையில் நடத்துநர் தங்கராசு, உடன் பணியில் இருந்த ஓட்டுநர் முருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு போக்குவரத்து கழகம் கோபி கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து