முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்: பிறந்து 38 நாட்களே ஆன பேரனை கொலை செய்த தாத்தா கைது

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
Veeramuthu-2024-06-17

அரியலூர், சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியர். இவர்களின் மகள் சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். இதையடுத்து, காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேடி பார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சங்கீதா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தில் சந்தேகம் எழுந்த நிலையில், தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒத்துக் கொண்டுள்ளார். விசாரணையின் போது, வீரமுத்து அளித்த வாக்குமூலத்தில், சித்திரை மாதத்தில் மகளுக்கு குழந்தை பிறந்ததால் வீட்டின் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என பலரும் கூறினர். எனக்கு மகன் இல்லாததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நம்பினேன். இதனால் இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது யாருக்கும் தெரியாமல் குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்றேன் என தெரிவித்துள்ளார். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற அச்சத்தின் காரணமாக தாத்தாவே 38 நாட்களை ஆன பேரனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து