முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தாமதம்: டி.டி.வி .கண்டனம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
TTV 2023 01 20

சென்னை, சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது மனிதநேயமற்ற செயல் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்துக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் கடந்த மே 9-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்த 6 பெண்கள் உட்பட 10 அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போதுவரை அரசின் நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்காத தமிழக அரசு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் உரிய நிவாரணத் தொகையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து