எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.அந்த வகையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.இடைத்தேர்தலையொட்டி கடந்த 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாளை 21-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.
இந்த இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. செயலாளர்கள் உடன் இருந்தனர்.
பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை மெயின்ரோடு வழியாக தாலுகா அலுவலகம் வந்து தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


