முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாளில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு, இல்லையெனில் உண்ணாவிரதம்: பிரதமருக்கு டெல்லி அமைச்சர் கடிதம்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      இந்தியா
Adishi 2023-11-05

புது டெல்லி, டெல்லியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு 2 நாளில் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் நாளை 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டெல்லி அமைச்சர் அதிஷி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அதிஷி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டெல்லியில் 28 லட்சம் பேர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். நாளை 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இரு நாளுக்குள் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,  21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். அரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. 

மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமாறு பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்கக் கோரி அரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து