முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் ரங்பூரில் புதிய தூதரகம்: வங்காளதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி : பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
Modi 2023-09-08

Source: provided

புதுடெல்லி : வங்கதேசத்தவர்களுக்கு மின்னணு முறையில் மருத்துவ விசா மற்றும் அந்நாட்டில் மற்றொரு தூதரக அலுவலகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் டிஜிட்டல் டொமைன், பசுமை ஒத்துழைப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் நீலப்புரட்சி ரயில்வே ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது., இரு நாடுகள் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் நடக்கிறது. வங்கதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக் காட்டுகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்காக மின்னணு மருத்துவ விசா வசதி அறிமுகம் செய்யப்படும்.

வங்கதேசத்தின் ரங்கப்பூரில் புதிய துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்படும். இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 1996 கங்கை நதி ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்து ஆலோசிக்க தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனை நடத்தப்படும். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய வங்கதேச அணிகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார். பிறகு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து