முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தானில் ஷாங்காய் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : கஜகஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. பாராளுமன்றம் கூட உள்ளதால், அவருக்கு பதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜிஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று பங்கேற்று வருகிறார். அதனால், இந்த ஆண்டும் அவர் பங்கேற்பார் என தகவல்கள் வெளியானது. 

ஆனால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பார்லிமென்ட் கூட்டம் நடைபெற உள்ளதால், இந்த கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து