முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மையான முறையில் பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நடத்த முடியவில்லை : பிரியங்கா காந்தி விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Priyanka-Gandhi-12023-06-08

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மயான முறையில் நடத்த முடியவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, 

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, நீட் முதுகலை தேர்வு ரத்து, யு.ஜி.சி. நெட் தேர்வு ரத்து, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ரத்து.  நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் தற்போதைய நிலை இதுதான்.

பா.ஜ.க. ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதம் மற்றும் ஆணவத்தின் காரணமாக, வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, கல்லூரிகளில் துறைகள் காணாமல் போவது ஆகியவை நமது கல்விமுறையின் அடையாளமாக மாறியுள்ளன.

பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ.க. அரசு தற்போது மாறியுள்ளது. 

நாட்டின் திறமையான இளைஞர்கள் பா.ஜ.க.வின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் முழு ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். எதையும் மாற்ற முடியாத மோடி, இந்த காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து