முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி அருகே கார் மோதி 3 பெண்கள் பலி : தலா ரூ. 3 லட்சம் அறிவித்தார் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Thoothukudi 2024-06-23

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கார் மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த தர்மராஜன் என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனது நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து நாலுமாவடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  

அப்போது முக்காணியில் சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மீது கார் மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சாந்தி, அமராவதி, பார்வதி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தாய் என்பவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை போலீசார் கைதுசெய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. கார் மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து