முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
CBI 2023 04 19

Source: provided

புதுடெல்லி : கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணையை தொடங்கியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் அளித்த புகாரின் பேரில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதே முறைகேட்டில் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் தம்வசம் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, நேற்று (ஜூன் 23) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது சி.பி.ஐ..

தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, தேர்வு முறையில் முறைகேடு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண் போன்றவற்றை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் நீட் மறுதேர்வு வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அந்தத் தேர்வை மத்திய அரசே ரத்துசெய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 18-ம் தேதி இந்த தேர்வு நடைபெற்றது. யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. தொடர்ந்து நேற்று (ஜூன் 23) நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து