முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெசிகா பெகுலா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      விளையாட்டு
Jessica 2024-06-23

Source: provided

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார். இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார். 

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________

தூங்க மாட்டேன்: ரஷித் கான்

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி ஆப்கானிஸ்தான்  அபார வெற்றிப்பெற்றது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது: என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். 

இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன். இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது. எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

_________________________________________________________________________

இலங்கை சாதனை சமன்

ஆன்டிகுவாவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 37 ரன், ரிஷப் பண்ட் 36 ரன், ஷிவம் துபே 34 ரன், ரோகித் 23 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன்செய்துள்ளது. இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 49 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை தலா 30 போட்டிகளில் வென்றுள்ளன.

_________________________________________________________________________

வீடியோவை பகிர்ந்த பண்ட்

ஆன்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார். அதில், "அருமையான வெற்றி. என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே. ஒரு அற்புதமான வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன். எனது முதல் ஸ்க்ரீன் ரெக்கார்டாக இதை உருவாக்கியவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து