Idhayam Matrimony

பாராளுமன்ற வளாகத்தில் 'இன்டியா' கூட்டணி போராட்டம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
INDIA 2024-06-24

புதுடில்லி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி 'இன்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக வெற்றிப்பெற்றது. இதனையடுத்து மோடி, 3வது முறையாக பிரதமரானார். இந்த நிலையில் 18வது பார்லி., கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) துவங்கியது. முதல்நாளில் வெற்றிப்பெற்ற எம்.பி.,க்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இன்டியா' கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பார்லி., வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் சோனியா, கார்கே, கனிமொழி, உள்ளிட்ட இன்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து