முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாந்தர் விமர்சனம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      சினிமா
Lanter-review 2024-06-24

Source: provided

காவல்துறை உயர் அதிகாரியான விதார்த் நேர்மையானவர். அவரது மனைவி நாயகி ஸ்வேதா டோரதி இருட்டு மற்றும் அதீத சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து மயக்கமடைந்து விடும் பாதிப்பு உடையவர். அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோவை நகரை விட்டு புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் விதார்த் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கோவை நகரத்தில் முகம் தெரியாத ஒரு நபர், எதிர்படும் நபர்களை கடுமையாக தாக்குவதாக புகார்கள் வருகிறது. அந்த நபரை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள். விசயம் அறியும் விதார்த், அந்த மர்ம மனிதரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கிறார். அந்த மர்ம நபர் யார்?, அவரை விதார்த் தலைமையிலான குழுவினர் பிடித்தார்களா? என்பது ஒரு கதை.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தன் வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை பார்த்துவிட்டு, அது குறித்து மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கிறார். அவர் சொல்லும் தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு வருகிறார். அவரை மருத்துவமனையில் இருந்து அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வரும் அவரது கணவர், பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார். அதன் பிறகு அந்த வீட்டுக்குள் நடந்தது என்ன?, மருத்துவர் என்ன சொன்னார்? என்பது மற்றொரு கதை.

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்ஸ் அடுத்தடுத்த காட்சிகளின் போது குறைவதால், எதாவது பெருசாக செய்து ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிட வேண்டும், என்று இயக்குநர் மேற்கொண்ட கிளைமாக்ஸ் முயற்சி பலிக்கவில்லை.

மொத்தத்தில், ‘லாந்தர்’மக்கள் மனதில் வெளிச்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து