Idhayam Matrimony

டி20 உலகக்கோப்பை தொடர்: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்திய அணி?

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

செயின்ட் லூசியா : டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..? வாய்ப்பு எப்படி உள்ளது.

இறுதிக்கட்டம்... 

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்றுடன் ( இந்திய நேரப்படி இன்று) முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி மட்டுமே அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடைசி லீக்கில்... 

இதில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்த பிரிவு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 4 அணிகளுக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.

முன்னேறுமா...?

செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறுமா..? முழு விவரம் பின்வருமாறு:-

முதலிடத்தில்... 

குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

41 ரன்கள்...

மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து