முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நிகழ்வு: காங். மீது பிரதமர் மோடி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடெல்லி : அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று 49 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவசர நிலையை அமல்படுத்தியவர்களால் நாட்டில் அரசியலமைப்பை நேசிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.  2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து பா.ஜ.க. ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21-ம் தேதி திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அவசர நிலைக்கு எதிராக போராடிய சிறந்த ஆண்கள், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இன்று. ஒவ்வொரு இந்தியரும் சிறப்பாக மரியாதை வைத்துள்ள அரசியலமைப்பு சாசனத்தை காங்கிரஸ் எவ்வாறு மிதித்து அடிப்படை சுதந்திரத்தை ஒடுக்கிய அவசர நிலையின் இருண்ட நாட்களை நினைவுபடுத்துகிறது.

அதிகாரத்தை பிடிப்பதற்காக காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தின் அனைத்து நெரிகளையும் மீறி ஒட்டுமொத்த நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றியது. காங்கிரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். 

சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை குறிவைத்து பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவசர நிலையை அமல்படுத்தியவர்களால் நாட்டில் அரசியலமைப்பை நேசிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து