முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டிவைக்கப்பட்ட பாலஸ்தீனியர் : அமெரிக்கா கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      உலகம்
America 2024-06-25

Source: provided

வாஷிங்டன் : பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ  வைரலானதை தொடர்ந்து அந்த சம்பவத்திற்கு  அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது  இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி  வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் கூறுகையில், மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து