முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      தமிழகம்
EPS 2024-07-09

Source: provided

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து பழனிசாமி ஆறுதல் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மாலை படுகொலை செய்யப்பட்டார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடல் செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஆம்ஸ்ட்ராங்கை இழந்து தவிக்கும் அவரின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. கொலை செய்தவர்கள் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு இந்த அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும். அண்மைக்காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.நெல்லையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை, சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை, இவற்றைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் படுகொலை நடந்துள்ளது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. உண்மைக் குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து