முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஒருநாள் மட்டும் இந்தியன் -2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      சினிமா
Indian-2

சென்னை, லைகா நிறுவன தயாரிப்பில், ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இன்று திரைக்கு வரவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு இன்று ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் இன்று (ஜூலை 12-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையடுத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு இன்று ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, இந்தியன்-2 திரைப்படம் வெளியாகும் நாளான இன்று ஒரு நாள் மட்டும், 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று 12-ம் தேதி காலை 9 மணி முதல், மறுநாள் 13-ம் தேதி அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட முடியும். இதற்கான அரசாணையை உள்துறை செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து