முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாயம் சிரிக்க வேண்டும்:ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      உலகம்
smile

Source: provided

டோக்கியோ: இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து சிரிப்பு பாதுகாக்கிறது என்ற ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக மக்கள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரிப்பு என்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அது பற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதை உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து