முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      இந்தியா
Hemant-Soran 2024-07-13

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட்டில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசவில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அதோடு, நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சோனியா காந்தியை சந்திக்கவில்லை. எனவே, அவரை சந்தித்தேன்.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடர்பான விவாதங்கள் தொடரும். இந்தியர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள். எவ்வளவு முடியுமோ அதுவரை அவர்கள் பொறுமை காப்பார்கள். அதன்பிறகு, அவர்கள் வாக்கு மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து