முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

மும்பை : இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டி-20 - 50 ஓவர் போட்டி...

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடருக்கு பின் இந்திய அணி இலங்கை சென்று தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. ஜூலை 27ல் முதல் டி20 தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாட்களில் (27,28,29) 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன்பின் ஆகஸ்ட் 2, 4, 7ம் தேதிகளில் 50 ஓவர் போட்டிகள் நடக்கவுள்ளன.

பங்கேற்க மாட்டார்... 

ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இலங்கை செல்லும் இந்திய டி20 அணிக்கான கேப்டனாக செயல்படவுள்ளார். எனினும், ஹர்திக் பாண்டியா அதன்பின்னர் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் விலகுகிறார் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

வழிநடத்துவார்.... 

இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, “ஹர்திக் பாண்டியா டி20 போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்துவார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறாரே தவிர, ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல், வேறு எந்த காரணமும் இல்லை. அவர் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

டி-20 கேப்டனாக நியமனம்

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்தக் காரணங்களால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. டி20 தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவாரென பிசிசிஐ சீனியர் குழு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளது. டி20 போட்டிகள் ஜூலை 27 -30 வரை நடைபெறுகின்றன. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் ஆக.2-7வரை நடைபெறும். இன்னும் சில நாள்களில் இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து