முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதானுடன் கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
RN-Ravi 2023 04 05

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான ஆகியோருடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேற்று முன்தினம் சந்தித்த நிலையில் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷாவுடனான ஆலோசனை குறித்து ராஜ்பவன் டுவிட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது. 

அதே போல், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடனான சந்திப்பு குறித்து கவர்னர் ஆர்.என். ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். 

திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 

 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என். ரவி  டெல்லியில் பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டம்,  ஒழுங்கு நிலவரம், பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

பிரதமரை சந்தித்து, தமிழக மக்களின் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் ரவி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை 19-ம் தேதி சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து