Idhayam Matrimony

அஸ்ஸாமில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
Gun 2023-10-05

கச்சார், அஸ்ஸாமின் கச்சார் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த கடுமையான என்கவுண்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் போலீசார் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கௌகாத்தியில் உள்ள அஸ்ஸாம் காவல்துறை தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ எங்கள் தரப்பில் காவல்துறையினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. கச்சார் மாவட்ட காவல்துறையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை. கிழக்கு தோலை கங்காநகரில் இருந்து 3 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

மேலும், மற்ற பயங்கரவாதிகளைத் தேடி ஒரு போலீஸ் குழு நேற்று காலை அந்த மூன்று பேரையும் பாபன் ஹில்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது என்கவுண்டர் நடந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில் 3 போலீஸாருக்கும் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 13 hours ago
View all comments

வாசகர் கருத்து