Idhayam Matrimony

அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கைது: பரபரப்பான நிலையை எட்டிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
Jail

Source: provided

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது  அடுத்தடுத்து கைதாகியுள்ள நிலையில் இந்த வழக்கு பரபரபப்பான நிலையை எட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

இதனால் இந்த கொலை வழக்கு பல்வேறு கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன், ஜாம்பஜார் ரவுடி சேகரின் மனைவி மலர்க்கொடி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இக்கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியது யார், அதற்கான காரணம் என்ன என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை தனிப்படை போலீஸார் துருவி வருகின்றனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பரபரப்பான நிலையை எட்டி உள்ளது. இது ஒருபுறமிருக்க கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து