Idhayam Matrimony

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசு முயற்சி : அமைச்சர் துரைமுருகன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2024      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

வேலூர் : வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன், காட்பாடி வட்டம் பொன்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனும் அவருடன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது.,

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாக பல இடங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். உதயநிதி முறையாக வளர்ந்தவர். கட்சியின் சட்டங்களுக்கு உட்பட்டவர். நான் 60 ஆண்டுகளை கட்சிக்காகவே அர்ப்பணித்தவன். எனதுவளர்ச்சி, எனது குடும்பத்தைவிட, கட்சியையே பெரிதாக கருதுபவன்.எனவே, கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.

மழைக்காலம் நெருங்குவதையொட்டி, சென்னையை சுற்றிஉள்ள நீர்நிலைகளைச் சீரமைத்துள்ளோம். நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முயற்சித்து வருகிறோம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து