முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

Soapera காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      சினிமா
Soapera 2024 07 22

Source: provided

சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநபர் பராமரிப்பு பிராண்டான மெடிமிக்ஸ்–ன் 55 ஆண்டுகால சிறப்பான பயணத்தை சித்தரிக்கும் ஒரு பிரத்யேக காபி டேபிள் புத்தகத்தை சோப்எரா (Soapera) என்ற பெயரில் மெடிமிக்ஸ் குடும்பம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

இந்த நேர்த்தியான புத்தகத்தின் முதல் பிரதியை, சென்னை மாநகரில் இன்று நடைபெற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வின்போது AVA சோலையில் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் டாக்டர் AV.அனூப் மற்றும் சோலையில்–ன் நிர்வாக இயக்குனர் V.S.பிரதீப் ஆகியோர் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் நேரில் வழங்கினர். 

சோப்ரா என்பது மெடிமிக்ஸ் தயாரிப்பாளர்களால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான காபி டேபிள் புத்தகமாகும். அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து மெடிமிக்ஸ்–ன் சிறப்பான வரலாற்றை 55 ஆண்டுகால சாதனை பயணத்தையும் இது அழகாக சித்தரிக்கிறது.

இந்திய கலாச்சாரத்தின் ஒரு மைய அம்சமான ஆயுர்வேதத்தின் ஆற்றலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் டாக்டர் VP.சித்தன் தொடங்கிய தேடலையும், உத்வேகமளிக்கும் பயணத்தையும் இப்புத்தகம் தொகுத்து வழங்குகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து