Idhayam Matrimony

நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி

புதன்கிழமை, 24 ஜூலை 2024      உலகம்
Nepal 2024 07 24

காத்மாண்டு, நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் பலியானார்கள். 

நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திலிருந்து நேற்று காலையில் 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்ற போது (டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த உடன் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  

நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விபத்தை  தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து