முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு

புதன்கிழமை, 24 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

புது டெல்லி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. பல கடிதங்களை எழுதி உள்ளது. அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையையும் அளித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 2 கடிதங்களை ஜல்சக்தி துறைக்கு அனுப்பி இருந்தது.

இந்நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மேகதாது தொடர்பாக கர்நாடகா அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது,

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், அணை கட்ட அனுமதிக்கும்படி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து