முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர்களுக்கு இரு சக்கர வாகன சேவை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024 07 24

Source: provided

சென்னை : காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.  அதனை தொடர்ந்து நேற்று  ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

2023-2024 ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு பதிலாக ரோந்துப் பணிகளை மேற்கொள்ள 200 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் 74 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகனங்கள், சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொண்டு குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். 

நடப்பு நிதி ஆண்டில் (2024-2025) தமிழ்நாடு காவல்துறைக்கு 46 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 840 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றில் சென்னை பெருநகர காவல்துறைக்கு மட்டும் 6 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 24 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து