முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத நிதீஷ் குமார்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா      அரசியல்
nitish-kumar

புது டெல்லி, புது தில்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க வில்லை. அதற்கான காரணங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாநிலத்தில் சார்பில் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்துகொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் கலந்துகொள்ளவில்லை, பீகார் பிரநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார்.

இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பிடிஐயிடம் தெரிவித்திருந்தார். மேலும், பீகாரைச் சேர்ந்த 4 மத்திய அமைச்சர்களும் நிதி ஆயோக்கில் உறுப்பினர்களாக பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து